Tuesday, April 14, 2015

கோடை வெயில் படுத்தும் பட்டை சமாளிப்பது எப்படி?

என்ன தான் கோடைக்காலம் ஆரம்பித்தாலும், கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் இருக்க முடியுமா என்ன? ஆனால் அப்படி வெயிலில் அதிகம் சுற்றினால், சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாகும். அதுமட்டுமின்றி, சருமம் எரிய ஆரம்பிக்கும். இதற்கு சூரியக்கதிர்களால் சருமம் காயமடைந்துள்ளது என்று அர்த்தம். ஆகவே சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும். மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்ய,  ஒரு சில டிப்ஸ்


குளியல் 

வெயிலில் சுற்றி சருமம் புண்ணாகி இருந்தால், குளிக்கும் நீரில் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குளித்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்






கற்றாழை 

கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்திற்கு தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சருமம் குளிர்ச்சியடையும்.

பால் 

பால் கொண்டு அன்றாடம் முகம் மற்றும் பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.







ஆலிவ் ஆயில் 

ஆலிவ் ஆயிலில் சரும அழகை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இதனைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.






ப்ளாக் டீ 

ப்ளாக் டீயில் டானிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.






வெள்ளரிக்காய் 

வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கிறது. எனவே இதனை அரைத்து முகம் மற்றும் கழுத்திற்கு மாஸ்க் போட்டு வாருங்கள்.







குறிப்பு 

இருப்பதிலேயே சிறந்த நிவாரணி 'வருமுன் காப்பதே சிறந்தது' என்னும் பழமொழிக்கு ஏற்ப, வெளியே வெயிலில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தி, நல்ல காட்டன் ஆடைகளை உடுத்தி, சருமம் வெளியே வெயிலில் அதிக நேரம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

Friday, April 3, 2015

வீட்டில் பாட்டி வைத்தியம்



இருமல்

 இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது.




குமட்டல் 




சிறு துண்டு எலுமிச்சை அல்லது இஞ்சியை வாயில் வைத்து சப்பி சாப்பிட்டால் குமட்டல் நின்றுவிடும். பாட்டி வைத்தியத்தில் குமட்டலுக்கு சிறந்த தீர்வாய் இது கருதப்படுகிறது.



தீக்காயங்கள் 


ஒருவேளை தீக்காயங்கள் எற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாளை இலையின் உள்ளிருக்கும் சாற்றை எடுத்து தடவினால் சீக்கிரம் காயம் குணமடையும்.




பல் வலி 


பல் வலி ஏற்படும் போது பல் மற்றும் ஈறு பகுதிகளில் கிராம்பு எண்ணெய்யை தடவி வந்தால் பல் வலி விரைவில் குணமடையும். பல் வலியில் இருந்து குணமடைய இது ஒரு சிறந்த தீர்வாகும்.




தூக்கமின்மை

படுக்கைக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் காய்ச்சிய பாலைப் பருகுவிட்டு சென்றால் நன்கு உறக்கம் வரும். இது நூற்றாண்டு காலமாக நாம் பின் பற்றி வரும் முறையாகும்.உங்களது தூக்கமின்மை கோளாறுக்கு இது கட்டாயம் தீர்வு தரும்.


குடல் பிரச்சனைகள் 


டான்டேலியன் (மஞ்சள் மலர் கொண்ட சிறிய செடி வகை), இதை டீயில் கலந்து பருகி வந்தால் குடல் சார்ந்த கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம். இன்றளவிலும் இது நல்ல தீர்வளிக்க கூடியது ஆகும்.



சிறுநீர் உபாதை 

மருத்துவ குறிப்புகள் ஏதும் இல்லை என்ற போதிலும், குருதிநெல்லி சிறுநீர் உபாதைகளுக்கு நல்ல தீர்வளிகிறது என பழங்காலத்தில் இருந்தே நம்பப் படுகிறது.



மாதவிடாய் கோளாறுகள் 


வெதுவெதுப்பான நீரில் இரண்டு அல்ல மூன்று வெற்றிலையின் சாரை கலந்து பருக வேண்டும். பின்னர் ஒரு நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை பருக வேண்டும். இவாறு செய்து வந்தால் மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணலாம்.





மாதவிடாய் கால மாற்றம்


 மாதவிடாய் ஏற்படும் நாட்களில் மாற்றங்கள் ஏற்படும் பிரச்சனை சரியாக வேண்டும் எனில், எலுமிச்சை ஜூஸில் கொஞ்சம் இலவங்கப் பட்டையை போடி செய்து கலந்து தினம் தோரும் பருகி வந்தால், நல்ல தீர்வளிக்கும். இது ஒரு சிறந்த பாடி வைத்தியமாக கருதப்படுகிறது.

அஜீரண கோளாறு 


ஆரஞ்சு ஜூஸில் கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுப் பொடியை கலந்து தினமும் பருகி வந்தால், நாளடைவில் அஜீரண கோளாறு சரியாகிவிடும்.

Thursday, April 2, 2015

கோடையில் வரும் முகப்பரு பிரச்சனையைத் தடுக்கும் உணவுகள்!!!

கோடையில் வரும் முகப்பரு பிரச்சனையைத் தடுக்கும் உணவுகள்!!!


பொதுவாக முகப்பருவானது சருமம் அதிக எண்ணெய் பசையுடன் இருந்தால் வரும். எனவே கோடையில் தான் முகப்பரு பிரச்சனை அதிகம் ஏற்படும். ஏனெனில் கோடையில் சருமம் எப்போதும் வியர்த்தவாறு இருப்பதால், சருமத்துளைகள் திறந்து, பாக்டீரியாக்கள் சருமத்துளைகளினுள் நுழைந்து, சருமத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தி, முகப்பருக்களை ஏற்படுத்தும். அதிலும் எண்ணெய் பசை சருமம் என்றால் அவர்களுக்கு சொல்லவே வேண்டாம். கோடைக்காலத்தில் அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அத்தகையவர்கள், கோடையில் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும். இதனால் கோடையில் முகப்பருக்களின் பிரச்சனையைத் தடுக்கலாம். சரி, இப்போது கோடையில் பருக்கள் வராமல் தடுக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம். முக்கியமாக இந்த உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அதனைக் கொண்டு சருமத்தையும் பராமரிக்க வேண்டும்.

எலுமிச்சை சாறு 

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதோடு, அதில் உள்ள வைட்டமின் சி, பிம்பிள் மற்றும் இதர சரும பிரச்சனைகளை குணப்படுத்தும். எனவே எலுமிச்சையை ஜூஸ் போட்டு குடித்தோ, அல்லது எலுமிச்சை சாற்றில் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்தோ கழுவ வேண்டும்.



ஆலிவ் ஆயில்



ஆலிவ் ஆயிலில் அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இவை சருமத்தை இளமையுடனும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும். அதுமட்டுமின்றி, ஆலிவ் ஆயில் சருமத்துளைகளை சுத்தம் செய்து, பிம்பிள் வருவதைத் தடுக்கும். எனவே தினமும் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வருவது நல்லது.

பூண்டு


 பூண்டு கூட பிம்பிளைப் போக்கும். மேலும் பூண்டு உடலினுள் மட்டுமின்றி சருமத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை அழிக்கும். அதற்கு ஒரு பூண்டு பல்லை எடுத்து தட்டியோ அல்லது சாறு எடுத்தோ, பிம்பிள் மீது வைத்தால் பிம்பிள் உடனே நீங்கும்.

வால்நட்ஸ் 


வால்நட்ஸ் சருமத்தை  மென்மையாகவும்,  ஈரப்பசையுடனும், ஆரோக்கியமாகவும்,  இளமையுடனும் வைத்துக் கொள்ள உதவும். எனவே இதனை உணவில் சேர்த்துக் கொள்வதுடன், அதனை அரைத்து அதில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, சருமத்தை ஸ்கரப் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி, சருமம் பொலிவோடு இருக்கும்.

தர்பூசணி 


தர்பூசணி சருமத்தை புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும், வறட்சியுடனும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும். எனவே இதன் சாற்றினை முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வருவது, கோடையில் சருமத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

தயிர் 



பிம்பிளை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? அப்படியெனில் தயிர் மிகவும் சிறப்பான பொருள். இதனைப் பயன்படுத்தி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதோடு, முகத்தில் தடவி மசாஜ் செய்து வர வேண்டும்.

Thursday, March 19, 2015

இயற்கையான உதடுகள் போன்று தெரிய சில டிப்ஸ்

உதட்டை அழகாக வெளிப்படுத்த லிப்ஸ்டிக் போடுவோம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை எப்போதும் போட்டுக் கொண்டிருக்க முடியாது. எனவே நேச்சுரல் லிப்ஸ்டிக் எனப்படும் லிப்ஸ்டிக்கை போட்டால், அது லிப்ஸ்டிப் போட்டு போன்றே தெரியாது.
எந்த உடைக்கு இந்த மாதியான லிப்ஸ்டிக் போட்டால், சரியாக இருக்கும். மேலும் அந்த தோற்றம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா!!!

ஈரப்பசையான தோற்றம் 

இது வீட்டில் இருப்பவர்களுக்கான சிம்பிள் மேக்-கப் போன்று இருக்கும். அதற்கு கூந்தல் பரட்டை போன்று இல்லாமல் இருக்க, தலைக்கு ஜெல்லை தடவி, கண்களுக்கு காஜல் போட்டு, உதட்டிற்கு நேச்சுரல் லிப்டிக்கை பயன்படுத்தினால், இந்த மாதியான தோற்றத்தில் காணலாம்.

சேலை 

சேலை அணியும் போது, அதுவும் கருப்பு மற்றும் வெள்ளை கலந்த நிறங்களில் சேலை அணிவதாக இருந்தால், அப்போது லைட் மேக்-கப் போட்டு, லேசாக மின்னும் நேச்சுரல் லிப்ஸ்டிக்கைப் போடலாம். இதனால், பார்ப்பதற்கு குடும்பப்பாங்கான பெண் போன்று இருக்கும்.

மங்கிய நிற உடைகள் 

உடைகளின் நிறங்கள் சாம்பல் அல்லது க்ரீம் நிறங்களில் இருந்தால், அப்போது அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்தாமல், லிப் கிளாஸ் அல்லது நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

கருப்பு நிற உடை 

கருப்பு நிறத்தில் உடை அணியும் போது, அதே அடர்ந்த நிற லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதை தவிர்த்து, மார்டனாகவும், சிம்பிளாகவும் தெரிவதற்கு, உதடுகளை மினுக்க வைக்கும் நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் சிறந்ததாக இருக்கும்.

சாதாரண தோற்றம் 

வேலைக்கு செல்லும் போது, சாதாரணமாகவும், அதிக மேக்-கப் இல்லாமலும் தெரிய வேண்டுமெனில், அப்போது நேச்சுரல் லிப்ஸ்டிக் பயன்படுத்துவது தான் சரியாக இருக்கும்.

அடர்ந்த நிற சேலைக்கு 

சேலை அடர்ந்த நிறத்தில், மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்துடன் அணியும் போது, மிகுந்த அழகுடனும், கவர்ச்சியுடனும் இருப்பதற்கு, உதட்டிற்கு போடும் லிப்ஸ்டிக்கையும் அடர்ந்த நிறமுள்ளதாக பயன்படுத்த வேண்டாம். அப்போது அதற்கு பதிலாக நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், சூப்பராக இருக்கும். நம்பவில்லையென்றால், இந்த படத்தைப் பாருங்கள்.

ஜீன்ஸ்-சர்ட் லுக்

 இன்றைய காலத்தில் நிறைய பேர் ஜீன்ஸ் தான் அணிகிறார்கள், அத்தகையவர்கள் குறைந்த மேக்-கப்புடன் நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

பார்ட்டி லுக்

 சிலர் பார்ட்டிக்கு மிகுந்த கிளாமருடன் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதிலும் சிலர், இந்த மாதிரியான கிளாமர் உடையை அணிந்து கொள்வார்கள். எனவே இந்த மாதிரியான உடை அணிபவர்கள், நேச்சுரல் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால், மிகுந்த அழகோடு காணப்படுவீர்கள்.